சில கவிதைகளில்

யாரோ எப்போதோ எழுதிய கவிதைகளை

வாசிக்கையில்தான் நமக்குள் விதைபடுகிறது

இன்னொரு கவிதையின் பிரசவம்

இன்னும் சில கவிதைகளில்

நமக்குள் தோன்றும் எண்ணம்

நம் கவிதையோ நமக்கு தோன்ற வேண்டிய

கவிதைகளாய் உரிமை கொண்டாடும்

மனதிற்கு தெரிவதில்லை அது தவறு என்று

அழகான கவிதைக்கு இணையாக

கவிதை படைக்க நினைத்து

அங்கும் தோற்று கொண்டிருக்கிறேன்

என்பதை உணராமல் பெருமை பட்டு கொள்கிறேன்

சுமாரான கவிதையை அழகு கவிதை என் நினைத்து

நிச்சயம் வராமலா போய்விடும்

எனக்கும் அந்த அழகான கவிதை

எழுதியவர் : ருத்ரன் (2-May-13, 11:51 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 84

மேலே