அதீத தேடல்

முடிவு என்ற
புள்ளியில்
ஒரு யோசனை
தியானிக்கிறது.....

தியானம்
கலைத்து போவதில்
முக்கிய பங்கு
ஆரம்பத்திற்கு உண்டு....

ஆரம்பிக்க தேவை
ஒரு முடிவு...

அங்கே கலையும்
தியானம்
தொடர்ந்து பயணிக்க
கலைவதன் அர்த்தம்
பொருளாகிறது
புள்ளிக்கு.....

மீண்டும்
ஒரு புள்ளியில்,
ஒரு கலைதல்
ஒரு முடிவு
தியானிக்கிறது...
அடுத்து ஒரு
பொருளுக்கான
ஒரு தேடலுடன்....

எழுதியவர் : கவிஜி (3-May-13, 10:31 am)
சேர்த்தது : கவிஜி
Tanglish : atheetha thedal
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே