நீ யார்

முகிலில் முகம் மறைத்து
இரவின் இருள் அகற்றி
தேய்வது வளர்வது போல்
மாய தோற்றம் கொண்டு
வான வீதியில் வலம் வந்து
காண்பவர் மனதை கொள்ளை கொண்டு
பெண்னோடு உன்னை ஒப்பிடசெய்தாய்
உன்னை வர்ணிக்காத கவிஞன் உண்டா
உன் பெயரை உச்சரிக்காத நாவும் உண்டா
நீ யாருக்கு சொந்தம்
எனக்கு மட்டுமா சொந்தம்
இல்லை இல்லை நீ இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தம்
அடம் பிடிக்கும் குழந்தைக்கு அம்புலியாகி
அமுதூட்டும் அன்னை உன் பெயரை சொல்லி பாட மழலையின் முகத்தில் மகிழ்ச்சி
காதலர் மத்தியில் கனவாய் வந்து
கவிதையின் வடிவில் நீ
உன்னை பார்த்து பாட்டி வடை சுடுகிறாள்
என்ற கதைகள் உண்டு
எட்டாத துரத்தில் நீ இருந்தாலும்
உன்னை எட்டிடுவேன் என்று சொல்லி
உன்னில் கால் பதித்த மனிதன் உண்டு
நீ யார் நீயார் நீ தான் நீதான் நிலா

கோவை உதயன்

எழுதியவர் : (3-May-13, 6:23 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : nee yaar
பார்வை : 104

மேலே