வியாபார உலகம்
விந்தைகள் நிறைந்த
வியாபார உலகம் இது
ஆதாயம் இருந்தால் அன்பு கொள்ளும்
அதுவும் போனால் தூரம் தள்ளும் .............
பணம் பேசும் உலகம் இது
பாச வேஷம் உலகம் இது
நேசம் மறந்த உலகம் இது
நாடகம் ஆடும் உலகம் இது...........
பொன்னும் பொருளும்
மதிப்பாய் தெரியும்
நல்ல மனங்கள்
குப்பையாய் போகும் ..........
பணம் கொண்டவன்
பந்தியில் இருப்பான்
குணம் நிறைந்தவன்
குப்பையில் கிடப்பான் ...............
வாரி கொடுக்கையில்
ஊரும் சிரிக்கும்
திருப்பி கேட்டால்
உறவும் வெறுக்கும் ..........
முதலீடுகள் இருந்தால்
முக்கிய புள்ளி
இல்லாமல் போனவன்
கருப்பு புள்ளி ...........
வளமை இருந்தால்
வாழ்த்தும் உலகம்
வறுமை கிடைத்தால்
சபிக்கும் உறவும் ...........
உறவுகளை மதிக்காத உலகம் இது
உணர்வுகளை போற்றாத உலகம் இது
ஆதாயம் பார்க்கும் மனித உலகில்
மனிதாபிமானம் மறந்த மனித உறவுகள் .........