முதல் பிறந்தநாள்
ஆசை மகனின் பிறந்த நாள்
அன்பிற்க்குரியவனுக்கு சிறந்தநாள்
மகிழ்ச்சிகள் நெஞ்சில் பொங்கும் நாள்
அவன் மண்ணில் அவதரித்த திருநாள் ............
பாட்டி தாத்த தாய் மாமன்
உறவுகளுக்கு எல்லாம் தகவல் சொல்லி
ஒன்றாய் கூட அழைப்பு தந்தோம்
பிள்ளையை வந்து வாழ்த்த சொன்னோம் ........
வந்தவர் எல்லாம் குழந்தை கொஞ்ச
சிலபேர் அவனை தூக்க கெஞ்ச
தத்தி நடக்கும் கால்களிளாலே
அம்மா மடியில் ஓடி சேர்ந்தான் .......
விளையாட்டு பொம்மையை அவன் நாட
விருந்தினர்கள் எல்லாம் அவனை தேட
அழகு ததும்பும் பால் முகத்தை
அள்ளி கொஞ்ச அனைவரும் துடிக்க .........
புலம்பல் நிறைந்த அவன் பாஷையை கேட்டு
பூரித்து போனது உறவு கூட்டம்
முத்தம் கொடுத்தே முத்தம் கொடுத்தே
அவன் முகமும் சிவந்தது அன்றைய நாளில் .........
புதிதாய் அழகாய் உடைகள் எடுத்து
நித்தம் அவனை சிங்காரித்து
பெரிய கேக்கை வாங்கி வைத்து
மெழுகை அதிலே எறிய வைத்தோம் ........
அம்மா கையில் குழந்தை இருக்க
அப்பன் அருகில் இணைந்து நிற்க
உறவுகள் எல்லாம் சூழ்ந்து கொள்ள
அவன் பிஞ்சு கைகளை பிடித்தவாரே
கேக்கை வெட்டி மகிழ்வை பகிர்ந்தோம் ..........
நண்பர் கூட்டமும் உறவினர் கூட்டமும்
ஆளுக்கொரு பரிசை அன்பாய் கொடுக்க
நினைவுகள் நிலைக்க புகைப்படம் எடுத்து
உணவு உண்டு விழாவை நிறைவு செய்தோம் ........
வந்த கூட்டம் மெல்ல கலைய
ஆரத்தி தட்டால் கண்ணார் கழித்து
சோர்ந்து போன அவனை சேர்த்து அனைத்து
உறக்கம் கண்டால் அவளது அன்னை ..........