சோத்துக்கென்ன செய்ய?
ஆத்தா முத்துமாரி நீ
அழகு முத்துமாரி!.
காத்து எம்மை வாழ வைப்பாய்
உலகு முத்துமாரி.!
வேப்ப இலை தேடுறேனே,
காப்புக் கட்ட நாடுறேனே,
தோப்புத் தேடி ஓடுறேனே,
தோத்துத்தான் வாடுறேனே.!
மரமிருந்த காடு இப்போ
மனிதருக்கு வீடாச்சோ!
நிறம் மாறி பச்சையிப்போ
வரங்கேட்டுப் போயாச்சோ!
காடழிஞ்சு போயாச்சு,,
காத்துங்கெட்டு ஆயாசுசு,
ஓடி மழை ஒளிஞ்சாசுசு,
ஊத்துந்தூந்து காஞ்சாச்சு.
ஆத்துவெள்ளம் ஓடாதோ!
அதக்குடிச்சும் வாழலாமோ!
சோத்துக்கென்ன செய்யலாமோ,
பாத்துக்கோடி முத்துமாரி!
.
சமூக்ககவி.கொ.பெ.பிச்சையா.