மே தினம்

அல்லும் பகலும் ஓய்வுறா
அடிமையாய் தினமும் -நீ உழை
விண்ணும் மண்ணும்
வியக்க வளர்ச்சி காணும்
நம் பூமி -என்னும்
பொய்மைக் கூறியே -ஏவினர்
வேலை நாள் முழுதும்
ஏது மறியா உழைப்பாளர்களை
ஏன் எனக் கேட்காதவர்கள்
என எண்ணியே !

நெற்றி வியர்வை நிலம் காண
வளம் காணும்-உலகமைக்கும்
வற்றாத இவன் உழைப்பை
முற்றாக சுரண்டிட முனைந்த -முதலாளியம்
அற்றாக வேண்டுமென
ஒற்றாக எழுந்தனர்-
திசையாவும் இயங்கிட-
விசையான தொழிலாளர்
அசையா துணிவுடன்
அகிலமெங்கும் புரட்சிக் கொடியுடன்!

எட்டு மணி நேர வேலை
எட்டும் நாள் வரும் நாளை-என்ற
தொழிலாலர்ப் புரட்சி
எட்டுத்த் திக்கும் பேரெழுச்சி -இதைக் கண்டு
அமெரிக்கா,ரஷ்யா ,சிகாகோ நகர் யாவையும்
ஆக்கிரமித்த தொழிலாளர்க் கிளர்ச்சி
முற்றுப் பெற நினைத்திட்ட
மூடர்கள் -தூக்கிலிட தொழிலாளர் தலைவர்களை
வெற்றிக்கொண்டது - உழைப்பவர் போற்றும்
உன்னத தினமாய்

மே தினம் !

எழுதியவர் : தமிழ்முகிலன் (5-May-13, 9:59 am)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 109

மேலே