இனியும் மயங்காதே

நாம் ஆடியதும் பாடியதும் போதும்
அறிவின் நல்வழி நடப்போம்
நாகரீகமற்ற பாதைதனை மறப்போம்
நலிந்தவர்களின் வறுமையைப் போக்கிடுவோம் பாரினிலே...!

தெருத் தெருவாய் சுற்றினாலும்
நன்றியுள்ள நாய்கள்தான் வீதியிலே காவலாய்
மனம் திருந்தியதால் அறிவும் மழுங்காது
மனித நேயமும் சாகாது நம் நெஞ்சத் தூணியிலே...!

கவலையை மறப்பதற்கு மது மயக்கம் போக்குமா?
வஞ்சனை தீர்க்க பழிக்குப் பழி சாத்தியமா?
நெஞ்சம் எனும் மாளிகை பொங்கவேண்டும் பாலாக
வஞ்சனையின்றி மகிழ்ந்து வாழவேண்டும் தரணியிலே...!

மண் குடத்திலும் நீரின் சுவையும்
பொன் குடத்திலும் நீரின் சுவையும்
தேன் போலதான் சுவைத்திடுமே
மனம் போலத்தான் சுவையும் ஆசையுமே ....!

போலிகளைக் கண்டு இனி மயங்காது
வாழ்விலும் தாழ்விலும் வெற்றியை
முயல் ஆமை போல் கொண்டாடி மகிழ்ந்திடு
என்றென்றும் இறைவன் நம் வசமே....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-May-13, 10:21 am)
பார்வை : 114

மேலே