எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[8]

அதிகாலை 3.45 மணி
******************************
நீ துயில் கொள்ள
ஆரம்பித்ததும்
ஆரம்பித்த
என்னைப் பற்றிய
நெடுங்கனவு ஒன்று
தொடரும் என்ற
அறிவிப்பு இன்றி
முடிந்திருக்கும் அங்கே !

எனது
தூக்கத்தைக் கலைத்த
சிந்தனையொன்று
சுகமான கவிதையாகிறது
இங்கே !!
[17]
***********************

[பக்கம் 9.. தொடரும்]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (6-May-13, 10:23 am)
பார்வை : 119

மேலே