அன்னையின் எழில் சிரிப்பு

அமைதியான மாலை பொழுது..!
அற்புதமான மேகக் கூட்டம்..!
ஆனந்தமாய் தோன்றி மறையும்
ஆதவனின் அருமைத் தோற்றம்..!

சில்லென்று பரவி மனம்
சிலிர்க்க வைக்கும் தென்றல்காற்று..!
சிறுசிறு துளியாய்வந்து மனச்
சிறகை நனைக்கும் அழகு மழை..!

பச்சைப் பசலேன்று தவங்கிடக்கும்
புல்லின் நுனிமேல் பனித்துளி..!
பரபரப்பாய் வந்து பலநெஞ்சங்களை
பயமுறுத்தும் மின்னலின் 'பளிச்' ஒளி ..!

மாற்றங்களும் மாற்றிடாது இயற்கையின்
மாபெரும் தோற்றப் பொலிவை..!
மனிதனே மாற்றிடாதே அழகு
மண்ணரசியின் எழில் சிரிப்பை..!

எழுதியவர் : அன்பு செல்வம் (7-May-13, 6:53 pm)
பார்வை : 87

மேலே