கடி கடி கடி ...!!!!
நிதி நிறுவனத்துக்கும்,குதிரைப் பந்தயத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன தெரியுமா?''
'நீயே சொல்லு,'
''நிதி நிறுவன அதிபர் ஓட மாட்டார் என்று நினைத்துப் பணத்தைப் போட்டால் அவர் ஓடி விடுவார்.ஓடிவிடும் என்று நினைத்து குதிரையின் மீது பணம் கட்டினால் அது ஓடாது.''
******
''நான் தோசை செய்தேன்.''
நிஜமாவா?
''நிஜ மாவில் செய்யவில்லை.அரிசி மாவில் செய்தேன்.
******
''இந்தக் கடிதம் மொட்டைக் கடிதம் என்று எப்படி சொல்கிறாய்?''
'நாலு மூலையிலும் சந்தனம் தடவி இருக்கே!'
******
நம்ம தலைவர் பேசிக்கிட்டிருந்தபோது எதிரே இருந்த மரங்களெல்லாம் விழுந்து விட்டதாமே!
''அவருதான் பேசியே அறுத்திட்டாரே!''
******
''ஏண்டா தேர்வு அறையில் தூங்குகிறே?''
'நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலை என்று முழிச்சிக்கிட்டு இருக்காதே என்று சொன்னீர்கள்?
******
ஆசிரியர்:ஏதேனும் ஒரு திரவத்தின் பெயரை சொல்லு,''
மாணவன்:உபத்திரவம்.
******
''எங்க அப்பா பத்து ஆண்டாக வியாபாரம் செய்கிறார்.ஆனால் சேமிப்பே இல்லை.''
'என்ன வியாபாரம்?'
சேமியா வியாபாரம்.''
******
''ரெண்டு கண்ணிருக்கே,அரிசியில் ஒழுங்காய் கல்லைப் பொறுக்க முடியாதா?''
'முப்பத்திரண்டு பல்லு இருக்கே,மெல்ல முடியாதா?'
******
''போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்பில முழுவதும் ஓட்டையாயிருந்தது.''
நீங்க எழுதிக் கொடுத்ததைப் பாருங்க!நீங்க துவாரம் பருப்பு வேண்டும் என்று தானே எழுதியிருக்கிறீர்கள்!'
******
நன்றி ;முலுமுதலோன்