வந்தது... போனது... மறைந்தது...

நான் சாதிக்க நினைப்பதை
லட்சியமாய் கொண்டு
வெறியோடு படிக்க...

மதிப்பெண் அதிகம் எடுத்தால்
கைபேசி வாங்கித் தருவதாக
பெற்றோர் ஆசைக் காட்ட...

மதிப்பெண்களும் நிறைய எடுத்து
கைபேசியும் கையில் கிடைக்க...!!!

முன்பு வரை,

புத்தகமும் கையுமாக இருந்த நான்

இப்பொழுது,

கைபேசியும் கையுமாக இருக்கிறேன் !

அந்தோ!!!

போனது என் படிப்பு மட்டுமல்ல
என் லட்சியமும்,
என் கனவும்,
சேர்ந்தே போனது!!!

எழுதியவர் : ஜா. ஜான்சி (9-May-13, 8:31 pm)
சேர்த்தது : J Jancy
பார்வை : 89

மேலே