உயிர் உறிஞ்சும் பூ
சிரிக்காதே பெண்ணே !
என் உறக்கம்
என்னை விட்டு ஓடிப்போகிறது .
உன் ஆடைகளுக்கு
உள்ள அகம்பாவம்
அண்டை நாட்டு
ராஜபட்சேவுக்கு கூட கிடையாது.
ஏன்னென்றால் அவைகள்
எனக்கு முன்னால்
உன்னை தழுவிக் கிடந்தனவாம்.
பணத்தைப் பறிகொடுத்து,
பரித்தவிக்கும் ஏழையைப் போல்
உன்னிடம்
என் இதயத்தைப் பறிக்கொடுத்தவன் நான் .
எந்த நாட்டு
ராணுவத்தில் இருந்தாய் நீ!
உன் விழி எந்திரத் துப்பாகியால்
விடாமல் என் உயிரைத்
துளைக்கிறாயே!
ஆப்பிள் பழத்தைப் புசிக்காதே நீ
சிவந்து இருப்பது ஆப்பிளா,
உன் உதடுகளா
என்பதே தெரியவில்லை!
உயிரை உறிஞ்சி
பூச்சிக்களையும், விலங்குகளையும்,
உண்ணும்
பூக்களைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்.
என்னையே மொத்தமாக
விழுங்கும் நீ
எந்த வகைப் பூ!!!

