என் தமிழ் மீனவன் வீழ்கிறான் அங்கே....
கால் வயித்த நேரச்சு வெக்க,
கடலுக்குள்ள போவோ நாங்க..
காவலுக்கு வந்ததாரு,
கடல் நீரும் கண்ணீருந்தானே..
எங்க பச்ச மண்ணு உசுரு வாழ
பாதி கடல கடந்தோமே,
ரத்த வெள்ளோ உண்டாக்கி
நீல கடலோட அத நீந்த வச்சான்..
வலையக் கிழிச்சு அவன் வீரனானான்,
அந்த அலையக் கடக்க எங்களால முடியலையே..
அவன் துப்பாக்கி எங்க உசுரக் கற்பழிக்க,
அங்க, எங்க வீரம் கற்ப்பிழந்து செத்துப் போனோமே..
அகதியா ஆனோமே,
அள்ள முடியா சோகம் நெஞ்சுக்குள்ள,
அல்லப் பட்டு ஆளப் பட்டோமே,
அல்லோலப் பட்டு ஆருசுர விட்டோமே..
கட்டுமரத்தோட கடலுக்குள்ள போனா,
வெட்டு முதுகோட கரையோரம் ஒதுங்கறோம்..
ஈழக் காத்தோட இனங்கள் வந்து,
ஈமம் செய்யுது எங்கள இனத்தோட வச்சு..
எங்கள சுட்டுப் போட்டாலு வீதியில
அதத் தட்டிக் கேக்க நாதியில்ல,
ஓட்டு கேட்ட எங்க அரசும்
ஒட்டவில்ல எங்க கிட்ட..
மீன பிடிக்க போன மச்சா,
இப்ப வருவான் அப்ப வருவான்,
எப்ப வருவானுனு ஏங்கி கெடக்க,
வந்ததூ வந்தான்
எரைய புடிச்சுட்டு வரல,
எரயாவே வந்தான்
அவ ஈரகொள நடுநடுங்க..
வயித்துப் பசிக்கு வடிச்சு ஆக்க,
கயத்து மேல நடப்பது போல,
உசுர எடுத்து ஓலைல வச்சு,
ஒத்திக பாக்கறோம் உசுரு போற நாள..