தொலைதல்

தொலைந்து போதல் சுவாரஸ்யமானது
நம்முள் தொலைந்தவர்கள் எத்தனை பேர்
நாம் எத்தனை பேருள் தொலைந்து போயிருப்போம்
விருப்பம் கொள்கிறோம் தொலைந்து விட்டபின் தேடுவதிலே
சில நேரம் வெறுப்பு கொள்கிறோம்
தன்னைத் தானே தொலைத்தவன் எதிரியாகிறான்
தன்னுள் தொலைந்தவன் ஞானியாகிறான்
சிலவற்றை வேண்டுமென்றே தொலைக்கிறோம்
சிலவற்றை வேண்டாமென்றே தொலைந்து போகிறோம்
எதையுமே தொலைக்காதவன்
எப்போதும் வாழ்ந்ததில்லை
வாழ வேண்டி தொலைப்போம்
வாழ்வதற்காகத் தொலைப்போம்

தொலைத்தல் சுவாரஸ்யமானது

எழுதியவர் : பகிர்வோன் (11-May-13, 7:59 am)
சேர்த்தது : பகிர்வோன்
பார்வை : 241

மேலே