சொர்க்கத்தில் திரு விழா ! ---கவின் சாரலன்

ஆலயம் நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் கூட்டம் ஆண்டவனின் நாமம் . ஆரவாரம் . சிலை நிறுவ வேண்டிய நற் தருணமும் வந்து கடந்து கொண்ட்டிருக்கிறது. தேடுகிறார்கள்
தேடுகிறார்கள். தெய்வச் சிலையை காணவில்லை கடைசியில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிலை மண்ணில் மனிதர்கள் காலடியில் புதைந்து கிடக்கிறது. தாகூர் எழுதிய கதையின் சாராம்சம்.

வணக்கத்திற்குரிய சிலை
மண்ணில்
எழுதவேண்டிய கவிதைகள்
காற்றில்
தமிழ் சொர்க்கம்
ஆரவார அவலக் கூட்டத்தின்
வீசியெறியும் சேற்றில்
இது என்ன சேறோ ?
செந்தாமரை எங்கே ?

சொர்க்கத்தில் திருவிழா. வசந்த வண்ணத் திருவிழா இல்லை.புதுக் கவிதை எழுதும்
புலவர்காள் சேற்றை வாரி இறைத்து மலின
மல்யுத்தம் செய்யும் அவலத் திருவிழா .
குழுச் சேர்த்து கோஷ்டி அமைத்து கொண்டாடும்
கோலாகலத் திருவிழா !
பொருப்பிலே பிறந்து புன்னகை புரிந்து நிற்கும்
தமிழ் அன்னையின் காலடிகளை சேற்றினாலா
கழுவுவது. வெறுப்பிலா வாழவேண்டும் தமிழினம்!

WHAT A PITY !
அந்தோ கழி பேரிரக்கம் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-13, 10:46 am)
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே