அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!!
இன்னல்கள் பட்டு
ஈன்றெடுத்த பொழுதிலும்,
இன்பமுற்றாள்
என் முகம் காண்கையில்!!!
அவள் குருதியில்
பாதியை பாலாக்கி,
குளிர செய்தாள்
என் பசியினை!!!
ஈக்கள்,எறும்புகள்
என்பல என்னிடம்,
அண்டாமல் எத்தனை
நாள் காத்தாள்!!!
தவழ செய்தாள்,
நடக்க செய்தாள்,
ஓட செய்தாள்,
பேச செய்தாள்!!!
வீரர்களின் கதைகள்
சொல்லி வீரனாக்கினாள்!!!
அஹிம்சை வாதிகளின்
கதைகள் சொல்லி
தர்மத்தை என்னுள்
நிலைக்க செய்தாள்!!!
என்தாய் நாட்டிற்கோ
நான் ஒரு
குடிமகன் என்றால்
என் தாய்க்கோ
நான் தான் பேரரசன்!!!
ஆம்,
அவளது கிழிந்த
சேலைதான் என்
இரத்தின கம்பளம்!!!
அவள் மடியே
நான் உறங்கும்
பஞ்சு மெத்தை!!!
அவளது அன்புத்தழுவளே
எனது பாதுகாப்பு கவசம்!!!
போர்கள் மட்டும்
இங்கு இல்லை
காரணம் இங்கு
எதிரிகள் என்ற
இலக்கு இல்லவேயில்லை!!!
இன்பம்,துன்பம்
இரண்டையும் பகிர்பவள்
மனைவி என்றால்!!!
இன்பம் எல்லாம் எனக்களித்து
துன்பம் மட்டும் தனே
ஏற்ப்பவள் அல்லவா தாய்!!!
இவள் இறைவனுக்கு இனையானவல்தான்!!!
இவள் கோவில் கட்டி
கும்பிட பட வேண்டியவள்தான்!!!
இவள் சேவை கடல் போன்றது!!!
இவளுக்கு எவ்வளவு சேவை
செய்தாலும் கடுகு போன்றதே!!!!
அம்மாவை கொண்டாடுவோம்!!!
உலக அம்மாக்கள் அனைவருக்கு
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!!!
-அன்புடன் நவீன் மென்மையானவன்