அன்னையை நினைத்தேன் ..!!!

பிஞ்சு விரல் பஞ்சு மலர்போல் இருக்க
பிடித்து பிடித்து இன்பம் காண்பாள் தாய் ..!!!

மார்பிலே போட்டுக் கொண்டே...
மனம் நிறைந்து மகிழ்வாள் என் தாய் ..!!!

மளமளவென வளர்ந்தேன் ..
மணமுடித்து வைத்தாள்...
நான் விரும்பிய உயிரை..!!

அன்னை அவள் கண் மூடியதால்...
அனாதையானேன் அன்பென்னும்
உறவிலிருந்து ...!!!

உண்மையை சொல்லுகிறேன்...
அம்மா உன்னை நினைத்தால் ...
கவிதை வருவதில்லை கண்ணீர்தான் ..
வருகிறது ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (12-May-13, 2:52 pm)
பார்வை : 94

மேலே