நினைவில் கடந்தவைகள்..!!

தேகம் சிலிர்த்த தருணம் அது,
தீண்டாமல் எனை அணைத்துக் கொண்டே இருந்தவள்,
யார் அவள் ?
எங்கோ சுற்றிய என் கற்பனை சிறகை
தன்வசம் ஈர்த்துக் கொண்ட மிட்டாய் கண்ணழகி..!!
எறும்பு ஊர்வது போல் என்னுள்
நகர்ந்த பேரின்பம் அவள்.!!
முன்னும் பின்னும் தெரியாத பொழுதும்
எனை முழுதாய் தொலையச் செய்த முதல் கன்னி..!!
நாள் நெருங்கிய நாட்களில், நாமும் நெருங்கினோம்.
என்னை உனக்கு புரியவில்லை,
உன்னை என்னால் ஆசுவாசப் படுத்த முடியவில்லை,
தூரத்தில் இருந்து பார்க்கும்வரைதான் பெண்கள்
கவிதைக்கும் , காதலுக்கும்.
ஏதோ பிழை செய்தேன் என்ற எண்ணம் அவளுக்குள்
தோன்றியது.
அன்று முதல் அவள் வாழ்வில் நான் இல்லை என்றானது.
ஏதோ ஒன்றை இழந்து விட்டேன் என்ற தவிப்பில்
நாட்களை கடக்கின்றேன்.
விருபினாலும் , இல்லாவிட்டாலும் காலம் நமை கடப்பதை தடுக்க இயலாது.
அவளை குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை.
கூத்தாடிக்கு துணையாய் வர கடவுளுக்கும் விருப்பம் இல்லை.
பின்பு, இவளுக்கு மட்டும் எப்படி,,??
ஏதோ ஆடி ஆடி தேய்ந்து கொண்டிருக்கிறோம்.
புகழ் , பணம் , செல்வாக்கு,
என்றாவது கிடைக்கலாம்..
முழுதாய் நான் பெற்ற அவளின்
முதல் முத்தம் மீண்டும் கிடைக்குமா..?
காரணமின்றி வெகுநேரம் பார்த்த அவளின் கண்கள் மறக்குமா..?
அவளின் அதீத முட்டாள் தனத்தை ரசித்த நாட்கள் திரும்புமா..?
நினைவுகளில் கடந்து கொண்டேதான் இருக்கிறது
நீங்காத காதலின் நினைவுகள்.
கடந்த காலம் என்பது வருடா வருடம்
வெள்ளையடித்துக் கொள்ளும் திருவிழா கூடம்.
அது ஒரு போதும் வர்ணம் இழக்காது.
கடந்து போன இருளை காலம்
தன் வசம் கொள்ளும்.
உலகை அதன் குறைகளோடே ஏற்றுக் கொள்கிறோம்.,
காதலையும் அப்படிதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்..!!
அதீத ஞானம் என்பது முட்டாள்தனத்தின் மீதமே..!!

எழுதியவர் : (15-May-13, 11:37 am)
பார்வை : 83

மேலே