நாமும் மற்றொரு நாமே..!!

ஆயிரம் இலையெனும் காற்றால்
அசைந்து கொண்டிருக்குது மரம்..!!
தீபதினுள் தேடும் தீயை போல
காற்றை தேடுகிறது இலையெனும் மரம்.!!
காற்றை கவ்விக் கொண்டு காகம் பறக்கிறது
கவளத்தை கவ்விக் கொண்டு காற்றும் காகை ஆகிறது..!!
தேநீர் கோப்பையில் மழைத் துளி விழுவதை
யாரும் குற்றம் சொல்வதில்லை..!!
தேநீரை தண்ணீராக கொடுக்கும்
கடைக்காரனை மழையும் மன்னிபதில்லை..!!
எரிந்து விழும் மெழுகினை ஏந்திக் கொண்டே
எரிகிறது தீயும்..!!
உருகுவது மெழுகா
இல்லை,தீயா..!!
பிணத்தின் முன் அழுகிறோமா.?
இல்லை பிணமாய் அழுகிறோமா..??
சாலையோரத்தில் இருப்பவனை
வீட்டினுள் எழுதுகிறான் ஒருவன்..!!
வீதி வீதியாய் திரிபவனை
சமூகம் என்று சொல்கிறது உலகம்..!!
பனித் துளி சிதற
குழந்தை சிரிக்கிறது..!!
குழந்தை சிரித்ததில்
பனித்துளி சிதறுது என்கிறான் கவி..!!
அடையாளங்களை தேடும்
அடையாளங்கள் சுமக்கும்
இந்நாளும் மற்றொரு நாளே,
நாமும் மற்றொரு நாமே...!!!

எழுதியவர் : (15-May-13, 11:38 am)
பார்வை : 62

மேலே