வியர்வைத் துளிகள்......
விரையும் ஆட்டோவில்
வியர்வையுடன் அமர்ந்திருந்தேன்
இடமில்லாததால்......
கன்னங்களில் தவழ்ந்தது
கண்ணம்மாவின் வியர்வை.....
அவளின் கடைக்குட்டிக்கு
கணக்குப் புத்தகம் வாங்குவதற்காக
கொளுத்தும் வெய்யிலில்
தேகம் முழுவதும்
கொட்டியது வியர்வை.....
கட்டட வேலை செய்பவரின்
கால்வாயிற்று சோற்றிற்காக
சூடான காற்றில்
அவிந்து கொண்டிருந்தது
சிறுவனின் குரல்
கொடுத்தவற்றை விற்பனை
செய்துவிட வேண்டுமென.....
அவன் குரல்வளைமேல
விஜயம் செய்தது வியர்வை
எதிர்பார்த்த எதுவும்
கிடைத்திடாத வேதனையில்
ஊற்றுபோல் வந்துகொண்டிருந்தது
வியர்வை அவளின்
இதயத்தில் தொடங்கி
கண்களின் வழியே,