கடவுளே !

கடவுளே !
நீ யார் என்று சொல் ?
இல்லை நான் யார் என்றாவது சொல் ?

என் வாழக்கையை நான் வாழ்வதை விட
என் வாழக்கையை நீ வாழ்வது தான் அதிகம்

இந்த அதிகம் உன் அநாகரிகம்

சிறு துன்பம் வந்தாலும் உன்னிடம்
ஓடிவருகிறேன் என்று
அதிகமாய் துன்பத்தை மட்டுமே
தருகிறாய்
நானும் உடனே தேடி வருகிறேன்

இன்று, நாளை, நாளை மறுநாள்,
அடுத்த வாரம், அடுத்த மாதம்,
அடுத்த ஆண்டு,
என அடுக்கடுக்காய் திட்டங்கள் வகுத்தும்
நடப்பதென்னவோ
நீ நினைப்பது மட்டும் தான்

இதற்கெதற்கு எனக்கென்று ஒரு
தனி பிறவி
நீயே வந்து வாழ்ந்து விட்டு போ

ஏன் இத்தனை துன்பம் என்று கேட்டால்
விதி என்கிறாய், சனி பெயர்ச்சி என்கிறாய்,
ராகு தோஷம் என்கிறாய்,
குருபார்வை சரியில்லை என்கிறாய்
ஆயிரம் காரணம் அழகாய் தான் சொல்கிறாய்

ஆனால் என்னை பார்ப்பவர்கள் எல்லாம்
நான் ராசி இல்லாதவன், நான் உருப்படாதவன்,
நான் சோம்பேறி என்று சர்வ சாதாரணமாய்
கேலி செய்துவிட்டு போகிறார்களே
இவர்களுக்கென்ன சொல்ல போகிறாய் ?

அனைவருக்கும் வாயில் சனி என்றா
காரணம் சொல்ல போகிறாய் ?

கடவுளே

நல்லவர்களை நீ சோதிப்பாய் அனால்
கைவிட மாட்டாய் என்று நம்பிதான்
பலபேர் சோதனை முடியும் முன்னே
வலியை தாங்க முடியாமல்
கெட்டவர்கள் ஆகி விடுகிறார்கள்
நானும் அப்படி போய்விடும் தூரம்
தொலைவில் இல்லை என்றே
தெரிகிறது

பொருளாதாரமும், வறுமையும்,
பிறர் பார்க்கும் இழிவான பார்வையும்
பிரம்பு கொண்டு துரத்துகிறது
குறுக்கு வழியில் பணம் திரட்ட

கடவுளே !

நீ நீயாய் இரு
என் வாழ்கையை மட்டும்
என்னை வாழவிடு

எழுதியவர் : எழுத்தாளன் சஷி (20-May-13, 9:11 pm)
பார்வை : 128

மேலே