யாசின் மாலிக் - தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது - அழுது கதறும் பொன்னார்...!

யாசின் மாலிக் ' பெயரில் என்ன இருக்கிறது..? பெயரைக் கேட்டால் சும்மா அதிருதில்ல....ரஜினியின் பொக்கைவாய் வசனத்தை விட, இவரின் அமைதியான உருவம் தேசியக் கட்சிகள், சங்க்பரிவார் கூட்டத்தை அலற வைத்துள்ளது. பெரும் ஓலக்குரலை அபயக்குரலை உருவாக்கி உள்ளது.

சீமானை கைது செய்து ஒரு பத்து வருடம் சிறையில் வைக்க வேண்டும் என்கிறார் நாடாளுமன்ற இணை அமைச்சர் வே.நாராயண சாமி அவர்கள்...
தீவிரவாதத்தை தூண்டுகிறார் என்று சொல்கிறார்.

யாசின் மாலிக் வருகையினால் மட்டுமல்ல...சீமான் அவர்கள் கூட்டிவந்து மீட்டிங் போட்டதால்..! சீமான் ஓட்டம் என்றார்கள்...சுமார் ஆயிரக்கணக்கில் போலீஸ் -சை குவித்து பீதியை கிளப்பி இருக்கிறார்கள்..சீமான் ஏதோ படுபயங்கர செயலை செய்தது போல.

அரசியலில் யாருமே செய்யாத செயலை சீமான் செய்திருக்கிறார் தமிழகத்தில். காஷ்மீர் மக்கள் என்றால் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று சொல்லும் அணைத்து ஊடகங்களும் கட்சிகளும் யாசின் மாலிக் வருகையினால் தங்களது ஜனநாயக வேடமும் மீடியாக்களின் முகம் கிழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி நீண்ட நாள் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு கூறுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்கிறார் பொன்னார்.

இலங்கைத் தமிழனை காக்க இந்தியத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதுடன், ஒட்டுமொத்த இந்தியாவை ஈர்க்கும் செயலை செய்ய வேண்டும். இதனை மறுத்து செயல்பட்டால் இலங்கை தமிழன் எவ்வகையிலும் நன்மை பெற இயலாது. என்பதோடு இலங்கை தமிழர்களுக்கு அது மேலும் கேட்டை விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

அதென்ன ஒட்டுமொத்த இந்தியாவை ஈர்க்கும் செயல்...? காவிரி கிடையாது, பாலாறு கிடையாது, கிடையாது.... கிடையாது ...எதுவுமே கிடையாது என்ற நிலையில் எப்படி ஈர்ப்பது..? சும்மா ஆவென்று வாயை பிளந்து கொண்டு இருப்பதுவா...?

இல்லையென்றால், இலங்கைத் தமிழனுக்கு கேட்டை விளைவிக்கும்...?

அப்படியே கலைஞர் சொல்வதைப் போல சொல்கிறார். கலைஞர் அவர்கள் அரசியல் வகுப்பு நடத்தியிருப்பாரோ ..? தமிழக அரசியலில் இனி பெரும் தாக்கத்தை உருவாக்கி விடுவார் சீமான் அவர்கள் என்றால் மிகையில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-May-13, 3:55 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 105

மேலே