சீமானை கைது செய்ய வேண்டுமாம் - அர்ஜுன் சம்பத் கோஸ்டி...?!
சீமான் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சென்னையில் டி.ஜி.பி. இடம் புகார் அளித்துள்ளனர்.கடந்த 18 - ம் தேதி அன்று கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்தியாவில் பிரிவினையை தூண்டும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார்.
தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர் தான் இந்த யாசின் மாலிக். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள சீமான் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், அதற்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் தமிழகத்தில் ஒருமித்த கருத்து உருவாகி வருகின்றது.
இந்த தருணத்தில், ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் பிரிவினை சக்தியை உருவாக்கும் வகையிலும் செயல்படும் சீமான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்கள் இந்து மக்கள் கட்சியினர்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லும் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாகி உள்ள இந்த
தருணத்தில் பின்னடைவை ஏற்படுத்துகிறார் என்று கவலை கொள்கிறார்...அதாவது பி.ஜே.பி.கட்சினருக்கு சாதகமாக உள்ள நிலைக்கும் பின்னடவை ஏற்படுத்துவதனால் கவலை கொள்கிறார், புகார் கொடுக்கிறார், கைது செய்ய வேண்டும் என்கிறார்.
காங்கிரஸ் கட்சி, பாஜக போன்ற கட்சிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள்...யாசின் மாலிக் தமிழகத்தில் வந்து கலந்து கொண்டதால், இடது சாரி என்று சொல்லிக்கொள்ளும் பால் காவடி, பறவைக் காவடி தூக்கும் கட்சிகள் வாயில் கடப்பாறையை முழுங்கியவன் எப்படி இருப்பானோ அவ்வாறு இருக்கிறார்கள்..
தமிழகத்தில் உள்ள 14 முஸ்லிம் அமைப்புகளும் கையையும் வாயையும் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள், தப்பித் தவறி சிறு காற்று கூட வெளியே வந்து விடக்கூடாது என்பதில்...!
யாசின் மாலிக் ஏன் வரக்கூடாது எனது கூட்டங்களுக்கு என்று, இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான் அவர்கள்.
ஆக, நாம் ஏற்கனவே கூறியது போல தமிழக இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சியை நோக்கி திரும்பும் நேரம் இது என்று கருதலாமா...?
சங்கிலிக்கருப்பு