மீண்டும் நீயே என் தாயாக ....................
தாய்ப் பாசத்தின் அர்த்தம்
இந்த மொழிகளின் வடிவத்தில்
எப்படியாவது இருந்து விட்டுப்
போகட்டும்!..........
இந்தப்
பிரபஞ்சத்தின்..........
தார்ப்பரியங்கள் கடந்து,........
உணர்வுகளை மீறி ஏதோ
புது விதமாய்.........
அர்த்தம் கொள்ளப்படட்டும்!...........
அம்மா.........
என் வெற்றிகளில்
நான் மகிழ்வு கொள்கையில்,
சேர்ந்து குதூகலிக்கும் நீ............
நான் தோல்விகளால் துவண்டு
போகையில் நீ ஆறுதல்
தருவதில்லை!...........
ஏனெனில்...........
என் தோல்விகளால்,
என்னை விட அதிகம் தெம்பிழந்து போபவள்
நீ தான்!....................
ஜென்மங்கள்
உண்மையானால்..........
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல!....
பிறக்கும் ஜென்மங்கள் யாவிலும்
நீயே என் தாயாக!.............
அந்தப் பத்து மாதங்களும்
மீண்டும்
உன் வயிற்றிலேயே நான் கருவாக!..........