நம் நாடு
பல நாடுகளில் சுற்றி திரிந்து
பல மக்களை சந்தித்து
பல மொழிகளை கேட்டு
பல நாட்டு இயற்கையை ரசித்து
வானமும் கடலும் சேரும் இடத்தில்
விடியும் காலை யின் அருமையை
அருகாமையில் கண்டு மகிழ்ந்து
ஆஹா !என்று கடவுளின் படைப்பை
மெய் மறந்து ரசித்து
மனதை வருடி ,இதம் தரும் நிம்மதியே,
நீயேன் நான் செல்லும் இடங்களுக்கு வராமல்
என் தாயகத்தில் மட்டும் உறைகிறாய்
என் தாய் மண்ணை மிதித்த உடன் என்னை அணைத்த உனக்கு
என் வணக்கங்கள்