முதுமையின் தொடக்கம்
வாழ்க்கை முழுதும்
ஓடி தொலைத்து
முதுமையில் பூங்காவிலும்
சாலை ஓரங்களிலும்
நடை பயிலும்
வேடிக்கை மனிதர்கள் !
மருத்துவ காப்பீடு
மருத்துவர் தகவல்
மருமகளின் கொடுமை
பேரனின் பெருமை
என நிறைய பேசி
தனிமையில் இருந்து
தப்ப முயற்சி !
கால கடிகாரத்தில்
தன் மணி என்ன ?
அடிக்கடி எழும்
விடை தெரியா கேள்வியில்
வரும் பக்தியோடு
கோயில்களில் வலம்
வரும் நேர்த்தி.
முதுமையின் முகம்
சற்று கோரம் தான்
யாரும் கண்ணாடி தேடாதீர்கள்