மாணவர் ECONOMICS

இது முற்றிலும் பொருளாதரம் கற்கும் மாணவர்களுக்கே ..கடந்த காலங்களில் இந்த ஒருவரி விடைகளால் பயன் பெற்ற மாணவர்களின் தூண்டுதல் என்னை ஊக்கி வித்தது ..இத் துறையில் 30 வருடத்துக்கு மேல் கற்பித்த அனுபவத்தை பகிர முன் வந்துள்ளேன் ..மாணவர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால் என் தனிப்பட்ட ஈமையிலில் கேட்கலாம் .
..நன்றி
********************
ஒரு வரி விடைகள்
1) பொருளதரப்பண்டம் பண்டத்தின் பிரதான பண்பு? ....அருமையாக இருப்பதுடன் அமையசெலவு ஏற்படும்
2) திட்டமிடல் பொருளாதாரத்தில் எதனைஉற்பத்தி செய்தல் என்ற பிரச்சனை தீர்மானிப்பது ?
நுகர்வோரும் அரசும் கூட்டு தீர்மானத்தில் .
3) ஒரு பண்டத்தின் கேள்வி நெகிழ்சி அற்றது எனின் மொத்த வருமானம் விலை அதிகரிக்கும் போது?.. அதிகரிக்கும்
4) ஒரு நிறுவனத்தின் நிலையான செலவு இரட்டிக்கும் எனின் எல்லைசெலவு?..மாறாதிருக்கும்
5) சாதாரண இலாபம் என்பது எவ்வகை வருமான விகிதமாக இருக்கும் ?..வளங்களின் தற்போதைய உபயோகத்தில் வைத்திருக்கும் தேவைக்கு இருக்கும் இலாபவிகிதம்
6) நிறை போட்டியில் தொழில் ஒன்றின் பிரதான பண்பு ? விலையை நிர்ணயிப்பவன்
7) நிறை போட்டியில் நிறுவனம் ஒன்றின் பிரதான பண்பு? விலையை ஏற்பவன்
8) ஒரு பண்டம் பொதுப்பண்டமாக இருப்பதன் எல்லைசெலவு ? பூச்சியம்
9) மேன்மையானபண்டம் ஒன்றின் பிரதான பண்பு? விலை செலுத்தி நேர்க்கணிய வெளிவாரி ஏற்படும்
10) தீய பண்டம் ஒன்றின் பிரதான பண்பு? விலை செலுத்தி எதிர் கணிய வெளிவாரி ஏற்படும்