இனி ஒரு உதவி செய்வோம்...!!!
அன்றைய தினம் மகிழ்ச்சி என
நாட்காட்டியில் ராசிபலன் பார்த்துவிட்டு
தொடங்கும் போதே பல சிக்கல்கள்..!!
பேருந்து நெரிசலில் ஆரம்பித்து
ஏகப்பட்ட இன்னல்கள் தாண்டி
ராசிபலனை பொய் என்று நம்பி
கடவுளை திட்ட ஆரம்பிக்கும் போது.....
ஆயிரம் தேவதைகளுடன் கடவுள் பூமி வந்து
என் கண் முன் தோன்றினால் கூட
கிடைத்திடாத மகிழ்ச்சி,
கண் தெரியாத புதிய நண்பருக்கு
ஏதோ சிறிது உதவியதற்கு,
என் தலையில் கை வைத்து
அவர் இதயம் தந்த ஆசீர்வாதம்
இறைவனை காணும் அதிசயங்களின்
மகிழ்ச்சியை வென்று நின்றது..!!
உதவி கேட்பவர்கள்
தங்களால் முடியாத ஒன்றை
செயல்படுத்த மட்டுமே
உதவி கேட்கிறார்கள்..!!
முடிந்தும் உன்னால் உதவி செய்ய
முடியவில்லை எனில்
நீ இருந்தும் யாருக்கும் பயனில்லை..!!
தேடி போய் உதவும் அளவிற்கு
நீ மகானாக இருக்க வேண்டாம்,
உன்னை தேடி வந்து உதவி கேட்போருக்கு
நீ மனிதனாக இரு...!!