வீதிகளில் கோயில்கள் எதற்கு வீட்டில் அம்மா இருக்க ??

கவலை இன்றி இதமாக படுத்திருந்தேன்
உன் கருவறையில் ..
நீ இருக்கும் தைரியத்தில் உன் உடலை
விட்டு இவ்வுலகம் வந்தேன்
எனது உலகம் பெரிதானது
உனது உலகம் என்னை சுற்றி சிறிதானது
என்னை அணைத்து பலன் கொடுத்தாய்
விரல் பிடித்து நடை கொடுத்தாய்
அம்மா என்று முதல் மொழி கொடுத்தாய்
உனக்கு,உலகில் பெரிய வெற்றி எனது வெற்றிதான்
எனக்கான உன் வேண்டுதல், கடவுளுக்கு தினம் தொல்லை
என் முக அசைவுகள் தெரியும்
சிரிப்புக்குள் மறைக்கும் சோகங்கள் புரியும்
கல்லூரி செல்லாத மனதத்துவ நிபுணர் நீ
வீதிகளில் கோயில்கள் எதற்கு வீட்டில் அம்மா இருக்க ??

எழுதியவர் : பரிசோ டேனியல் (27-May-13, 2:25 pm)
பார்வை : 114

மேலே