இயற்கை கவிதை

ஆதி முதல் தெய்வம் இயற்கை
ஆதலால்தான் வானம் நோக்கி
நாமும் கை தொழுகிறோம்
ஆதவனைத் தொழுகிறாம்

அம்புலியைத் தொழுகிறோம்
அன்னை பூமியைத் தொழுகிறோம்
ஆழியை தொழுகிறோம்
ஊழியைத் தொழுகிறோம்

முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
மெய்க்கருத்துணர அன்னையைத்
தொழுகிறோம் காற்றைத் தொழுகிறோம், ககனத்தை தொழுகிறோம்

நீரைத்தொழுகிறோம் நெருப்பைத்தொழுகிறோம்
இயற்கையாய் இறைவன் நிறைந்திருப்பதால்
இயற்கையைத் தொழுகிறோம்
ஆதியும் அந்தமும் இயற்கைதான்

நடுவேதான் வாழ்க்கை
வாழும் வரை தொழுவோம்
வாழ்ந்த பின்னும் தொழுவோம்
அதுதான் இயற்கை

அன்புடன்
தமிழ்த்தேனீ

எழுதியவர் : தமிழ்த்தேனீ (27-May-13, 5:28 pm)
சேர்த்தது : thamizthenee
பார்வை : 2600

மேலே