இல்ல (லாத) த்தரசி

அழகும் பணமும் இல்லாத
மங்கைக்கு இல்லை
இந்த இல்லத்தரசி பட்டம்

கல்லூரியில் எத்தனை பட்டங்கள்
வென்றபோதும்
வெல்லமுடியாத பட்டம் இந்த இல்லத்தரசி பட்டம்

காரில் வந்து இறங்கும் பெண்களுக்கு
கழனியாய் கிடக்கும் இந்த பட்டம்

கால்நடையாய் வருபவர்களுக்கு
கனவிலும் கிடைப்பதில்லை

சொந்த இல்லங்கள் இருக்கும் கன்னியருக்கு
சொந்தமாக துடிக்கும் இந்த பட்டம்

சாமானிய பெண்களை காணகூட நினைப்பதில்லை

அழகிகளின் அடிமையாய் இருக்க விரும்பும்
இந்த பட்டம்

சாதாரண பெண்களை அடிமையாய் கூட வைத்துக்கொள்ள விரும்பவில்லை

வங்கிகணக்கு பார்த்து பட்டம் குடுப்பவர்களின்
இடையில்

கணக்கே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் பாவம்

எல்லாம் உள்ளவர்களின் மத்தியில் எதுவும் இல்லாத மங்கைகள் என்றும் இல்லாத அரசிகளே .

எழுதியவர் : yasmeen (27-May-13, 5:46 pm)
சேர்த்தது : Yasmeen
பார்வை : 243

மேலே