தோல்வி உனக்கு இல்லை
வாழ்க்கை விடுகதையா
வாழும் தொடர்கதையா
சோகம் மாறும் வரை
ஒரு விடியல் நமக்கில்லையா ????????
நெஞ்சின் சோகமெல்லாம்
தூக்கத்தை தின்று விடும்
சொல்லா சோகமெல்லாம்
வார்த்தையாய் நின்றுவிடும்.......
சொல்லா காதல் போல்
எந்த சுமையும் மனதில் இல்லை
கவிதை இருக்கின்ற மனதில்
எந்த கவலையும் இருப்பதில்லை ............
கவலைக்கு உருவம் கொண்டால்
இடம் கொஞ்சம் போதவில்லை
தூசாய் கவலையை நீ நினைத்தால்
தோல்வி உனக்கு இல்லை
அது நிஜமாய் உனக்கு இல்லை