ராகதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ராகதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ராகங்கள் எல்லாம் தன்னை பயன்படுத்த மாட்டார்களா???
என ஏங்கிக்கொண்டிருந்த காலமது (1970's ).....
தேனியின் பண்ணைபுரத்திலிருந்து வந்த
நிறம் மாறாத பூவொன்று
தரம் மாறாத இசையை தேனாய் அள்ளிக்கொடுத்தது....
இந்த "தேனீ" யின் இசைதான் இன்றும் தேனிசையாய்
நாற்திசையும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது !!!
சுறுசுறுப்பின் உச்சகட்டம்!!!
ஓய்வில்லா ஒய்யாரம்!!!
பாடல்களுக்கெல்லாம் உயிர்நாடி....
இந்த பண்ணைபுரத்து வானம்பாடி!!!
சந்தங்களை சலிக்காமல் சமைத்தவர் !!!
வாலி, வைரமுத்து-வின் வரிகளுக்கு
வாழ்க்கை கொடுத்தவர் !!!
SP பாலு, ஜானகி, யேசுதாஸ்-யை
பக்குவமாய் பாட வைத்தவர் !!!
கமலஹாசனின் கம்பீரமான நண்பன் இவர்தான் !!!
பாரதிராஜாவின் பலமும் பாலமும் இவர்தான் !!!
கிராமத்து இசையிலிருந்து
மேற்கத்திய இசைவரை அள்ளிப்பருகியவர்
இவர் மட்டுமே !!!
இசைக்கருவிகள் ஒவ்வொன்றையும்
இசை அருவிகளாய் மாற்றியவர் !!!
நூறு வருட இந்திய சினிமாவில்
சிறந்த இசை அமைப்பாளர் இவர்தான் !!!
ரக ரகமான ராகங்களை ரம்மியமாய்
அள்ளிக்கொடுத்தவர் இவரே !!!
திருவாசகம் எனும் இசையால்
உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் !!!
ஏழிசையின் இயக்கத்திற்கும் இயந்திரம் !!!
இசை எனும் கோவிலுக்கு இறைவன்...
ராகங்கள் எல்லாம் இந்த தெய்வத்தினை தான்
வழிபட துடிக்கிறது !!!
யார் இவர் ???
இசையையே தனது இரு கண்ணாய் கொண்ட ஞானதேசிகன்
அவர்தான்,
இளையராஜா எனும் நம் ராகதேவன் (Maestro ) !!!
MSV, SDBARMAN, RDBARMAN இவர்களின் செல்லப்பிள்ளை !!!
அதனால்தான் ,
இவர் சாதனைகளுக்கு எல்லையே இல்லை...
அவர் சாதித்ததை சொல்ல என்னிடம் வார்த்தைகளும் இல்லை !!!
அவருடைய இசை அவருடையது அல்ல...
அவர் எண்ணத்தினுடையது !!!
அதனால்தான்,
அவைகள் உயிரோசையாய் உலா வருகின்றன !!!
அத்தனை மொழியிலும்
அசாத்திய இசையால் அசத்தியவர் !!!
இவர் நமக்கு கிடைத்த இன்னொரு அகத்தியர் !!!
காலத்தால் அழியாத இசைகளை அள்ளிக்கொடுத்தவர் !!!
இளைய தலைமுறைக்கும்
இசையை சொல்லிக்கொடுத்தவர் !!!
இந்த ஏழிசையின் நாயகனுக்கு
எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
ஜூன் 2 - ல் பிறந்த நாள் விழா காணும்
ராகதேவன் இளையராஜா-விற்கு
இந்த பாமாலை பாசமாய் படைக்கப்படுகிறது.........
என்றும் உன் இசையில் மயங்கும் ஜெகன். ஜீ