மனக்கண்ணாடி

என் மனக்கண்ணாடியில்
பிரதிபலிக்கும் என் முகங்கள்
என்னவேன்றே
எனக்கே புரியாதபோது..
என் உள்உணர்வோ
அவனின் மனதை
முழுமையாய் அப்படியே
ஆக்கிரமிக்க அனுமதிக்காமல் ...
அன்றிலிருந்து இதோ
இன்றுவரை
அலைக்கழிக்கும் நெருக்கடியினை
அவ்வப்போது எனக்களித்த
என் மனக்கண்ணாடியே ......
ஒரே ஒருமுறை
எந்தன் நிலை அறிந்து
என்னவனின் பிரதிபிம்பத்தை
மட்டுமே ஏற்றுகொள்வாயா..???
குத்தி கிழிக்கும்
முள்வேலியினை தாண்டி
இதமாய் புன்னகைத்தபடி
ஒற்றை ரோஜாவாம்
என்னவனை சேர்ந்திட
அந்நாள் என்நாளோ என்று....
என் மனமே என்மனக்கண்ணாடியே
என்று உரைப்பாயோ என்று
எண்ணியபடியே இன்று நான்.......!!!!!!!!!!