சாதிவாரி இடஒதுக்கீட்டின் கீழ்

பிரிவினை பல உண்டு
கலாச்சாரமும் பல உண்டு
பேசும் மொழியும் பல உண்டு
ஆட்சிகளும் பல உண்டு
ஆனால் மாற்றம் என்பது ஏதுமில்லை

நூறு சாதி ஆயிரம் மதம்
ஆனால் நாங்கள் அனைவரும் பாரதம்
என்னும் ஒர் தாயின் பிள்ளைகள்
நானும் அதன் தெருக்கோடி புதல்வன்

கற்கும் கல்வியிலும் பிழைக்கும் பிழைப்பிலும்
புரியும் வேலையிலும் உண்டு
எங்களுள் ஒர் பங்கீடு – அதுவே
அரசாங்கத்தின் சாதிவாரி இடஒதுக்கீடு

இல்லாதவர்களுக்கு கொடுப்பதும்
இருப்பவர்கள்க்கு மறுப்பதும்
அதன் இலக்கணம் – ஆனால்
சாதி பார்த்து வறுமை வருவதில்லை!

படிப்போம் சாதிகள் இல்லையென்று
ஆனால் கொடுப்போம்
சாதி சான்றிதல் பாடசாலையில்
பயில சேறும் போது!

பீத்துவோம் நங்கள்
அதிகம் பிற நாடுகளில் விஞ்ஞானிகளாகவும்
வெளிநாட்டு நிறுவனங்களில் அதிகாரிகளாகவும்
வேலை செய்பவர்கள் நாங்களென்று

ஆனால் கேட்க மாட்டோம்
கேள்வி - ஏன்
உள்நாட்டை விட்டு வெளிநாட்டில்
கை ஏந்துகிறோம் என்று?

சாதி வாரி இடஒதுக்கீடு!
சாதி வாரி இடஒதுக்கீடு!
உயர்ந்த சாதி இருப்பவன்
தாழ்ந்த சாதி இல்லாதவன்
இதன் கீழ் சன்மானம்

உயர்ந்த சாதியில் பிறந்து இருந்தும்
என் வீட்டில் ஒலை கொதிப்பதில்லை
எனக்கு இந்த அரசாங்கம்
உதவுவதும் இல்லை

குறைந்த மதிப்பெண் எடுப்பவன் புத்திசாலி
அதிக மதிப்பெண் எடுப்பவன் முட்டாள்
ஆம் உண்மைதான்
அரசாங்கம் இதை ஆமோதிக்கிறது

திறமை இருந்தாலும் வேலை இல்லை
பதவி இருந்தாலும் பதவி உயர்வில்லை
கீழ்சாதியில் பிறக்காதது
என் தவறு ஏதும் இல்லை!

மேல் சாதி! மேல் சாதி என்று
எங்களை மிதிக்காதீர்
எங்களிளும் ஏழைகள் உண்டு
பிச்சை கேட்கிறோம்!
திறமையை மதியுங்கள் மதிப்பு கொடுங்கள்!!

இல்லையெனில் செய்யுங்கள் இதையும்
கல்விக்கும் வேலைக்கும் சாதிவாரி
இடஒதுக்கீடு கொடுப்பதுப் போல்
குற்றவாளிகளுக்கும்
“சாதிவாரி இடஒதுக்கீட்டின் கீழ்”
தண்டனை கொடுங்கள்!!
ஜனநாயகம் செழி(சிரி)க்கும்!!

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (31-May-13, 2:14 pm)
பார்வை : 137

மேலே