மறுமணம்
பறிக்கபட்ட இறகுகள்.
பிடுங்கப்பட்ட வண்ணப்புடவைகள்.
ஏங்கியது கூந்தல்
ஏதிரே நின்ன மல்லிகையை கண்டு,
கண்ணீர்க்கும் வேலை வந்தது
கண் வழியே காவேரி ஓடுது,
வேலி சாய்ந்து தாலி இறங்கியது
தனக்கென ஒன்னு அதுக்கும்
இப்ப ஒன்னு அதுவும் தாய் தானு
தன்னந்தனியா வாழ முடியல
தனக்கென ஒன்ன காக்க முடியல
ஊரு சொல்லி கேட்கல
உறவு சொல்லி ஏற்கல
மறுத்து மறுத்து பேசி
மரத்தே போனது மனசு
மறுமணத்த மறுக்க முடியாம.
பாவி புள்ளைக்கு தெரியாது
பட்டுன்னு தகப்பன் வருவான்னு
வந்தவனும் முணுமுணுத்தான்
ஒத்தையாத்தான் வரனுமுன்னு
பெத்த மனம் கேட்கல
ஒத்தையா போக மனசில்ல
ஒத்துக்காமவும் இருக்க முடியல
ஒரங்கட்டிட்டா பெத்த புள்ளைய
மறுமணம் வழக்கந்தானே தப்புல்ல
மன்னிச்சுடடா ஏம்புள்ளனு
மறுவீட்டுக்கு புகப்போறா !
பழுக்குமுன்னே பறிக்கப்பட்ட பிஞ்சியாய்
பறக்குமுன்னே சிறகொடித்த குஞ்சியாய்
முழுச்சு முழுச்சு பாக்குது
தன்ன விட்டு போகும் தாய் மறுமணத்த
தன் தாத்தா மடியிலிருந்து ......