மறையும் நன்மைகள் சி.எம் .ஜேசு

பயிரிட்ட இடங்களெல்லாம் - கும்பிட்டு
வீடுகளாகி விட்டன - குருவி

கூடு இருந்த இடங்களெல்லாம்
வெட்டுண்டு மாடிகளாகிவிட்டன

மழைத்தண்ணீர் போகும்மிடமெல்லாம்
தாரிட்டு ரோடுகளாகி விட்டன

தாழாது தழைத்தக்குடும்பங்களெல்லாம்
ஓயாத சண்டையினால் தேய்ந்து விட்டன

உணர்வுகள் மங்கிவிட்டன
உண்மைகள் தூங்கிவிட்டன

உழைத்து வாழ்ந்ததெல்லாம் மறைந்து - பிறரை
அழித்து வாழும் நிலையாகிவிட்டது

பகுத்துணரும் பண்பு மறைகிறது
உயிரூட்டிய தெய்வத் தாயின்
அன்பு குறைகிறது

உள்ளமெனும் நல்ல இடம்
தீமையினால் தோற்கிறது

சொல்லும் செயலும் ஒன்றாயிராமல்
இரு வேறாக மாறிவிட்டன

பாசம் மறைந்து நேசம் மறைந்து
பிரிவுகள் பெருகிவிட்டன

மீட்டெடுப்போம் மீண்டும் வளர !
மறையும் நன்மைகளை

எழுதியவர் : சி.எம் .ஜேசு (31-May-13, 12:20 pm)
பார்வை : 87

மேலே