வலிகள்
வலி இல்லாத உயிரினமே
இல்லை.
அது நமக்கு வரும்பொழுது
யாருக்கும் தெரிவதும் இல்லை.
வலிகள் பலவிதம் இருந்தாலும்
மனதில் வலி வந்தால்
அதற்கு மருந்தே இல்லை.
வலி வரும்பொழுது துவண்டு
விடாமல் ஜெயித்துக் காட்டுபவன்
வாழ்க்கையிலும் ஜெயிக்கிறான்.
உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில்
ஆண்டவனுக்கும் நேரம் கொடுங்கள்.
மரண வலி வந்தால் அவன் தான்
உதவிற்கு உடனே வருவான்,
கூட இருப்போரும் அவனைத்தான்
அழைப்பார்கள்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நம்மை
ஆரத் தழுவி ஆசுவாசப் படுத்துவான்.
அவனின் ஸ்பரிசம் பட்டவுடன்
வலியுடன் ஒரு "மை" சேர்ந்துவிடும்.
ஆம், நாம் வலிமையுடன் இருப்பதாய்
உணர்வோம் .
அந்த வித்தையை அவனின்றி
வேறு யார் செய்வார்கள்.