(19)தந்திர காட்டில் நான் (3) குகை நோக்கிய பயணம்
(3) குகை நோக்கிய பயணம்
********************(தொடர்ச்சி )*************
எத்தனையோ பயணங்கள்
விண்ணில் வலம்வரும் விமான பயணம்
மண்ணில் வலம்வரும் ரகரக எரிபொருள்
.....................................................வாகன பயணம்
கடலில் வலம்வரும் கப்பல் பயணம்
எண்ணிலடங்கா பயணங்களில்
பிறப்பில் தொடங்கி இடுகாடு செல்லும்
இறப்பு என்னும் வாழ்க்கை பயணம் !!!!
ஆம் - இறப்புதான் முடிவான வாழ்க்கை பயணம்
ஒ மனிதர்களே
இயந்திரத்தனமான வாழ்கையில் இன்னும்
எத்தனை காலத்திற்கு பயணம் செய்வது
எங்கு பார்த்தாலும் எரிபொருளின்
நாற்றமும் ,நெகிழியும்-உலோகங்களும்
பிறவி சுழற்சியில் பிரிக்க முடியாதவையாக
உருவெடுத்துவிட்டது !!!!
அதன் துர்நாற்றத்தில் நறுமண மலர்களின்
வாடையும்
அதன் வர்ணங்களில் மலர்களின் உயிர்ப்பான
வண்ணமும் போயின,போயின !!!!!
சலிப்பான பயணம்
உயிர்ப்பற்ற பயணம்
இயற்கையின் நிறத்தை
கணினியில் மட்டும் கண்டு ரசித்திடும்
காலத்தை நோக்கிய மூடப்பயணம் !!!!
விதையிலிருந்து விஸ்வரூபம் எடுக்கும்
விஞ்ஞானத்தை வெட்டி வீழ்த்தி -அதன்
வீழ்ச்சியில் வீடுகட்டி வாழுங்கள் உயிர்காற்றுக்கு
விலைவைக்கும் கண்கொள்ளா காட்சியை
காணட்டும் இனிவரும் சந்ததிகள் !!!!
என்னை விடுங்கள்
குளிர்ச்சி மட்டுமே எனது வாழ்விற்கு
சொந்தமானது அதனை நோக்கி செல்கிறேன் ,
அமைதியான
ஆடம்பரமில்லாத
ஆணவமில்லாத
ஆரண்யம் எனதாகட்டும்
அதற்கான ஆசைகள்
அடிக்கல் ஆகட்டும் !!!!
********************(தொடரும்)*************
அன்புடன்
கார்த்திக்