கேள்விக்குப் பிறந்தவர்கள்..!
எத்தனை செண்ட் இடம்..?
வீடு சொந்தம் தானா..?
யார் பெயரில் இருக்கிறது..?
வாரிசுகள் உள்ளனரா..?
பங்காய் எத்தனை வரும்.?
ஆனந்தியின் சம்பளம் எவ்வளவு.?
எவ்வளவு போட முடியும்.?
எத்தனை தர முடியும்.?
செலவெல்லாம் நீங்கள்தானே..?
கேள்விகள்..கேள்விகள்..,
மணம்பேச வந்த
மாப்பிள்ளைகளுக்கு
மணமகளின் குணம்
தேவையில்லையாம்..!
வந்தஇடத்தில் கேள்வியாகவே
பேசுவதைக் கேட்டால்..
வெறுப்பு வருகிறதே..
அவன் பிறப்பு குறித்து
கேள்வியும் எழுகிறதே..!
----------