கண்ணனை தேடிய ராதை......!!!!!!

என் கண்ணா.......
நினைக்காத நாளில்லை
நீ நிஜம் அறிய வாய்ப்பில்லை ....
நிலைக்காது போனாலும்
உன் நினைவன்றி வேறில்லை....
மறக்காத நேரங்கள் உன்
மடி மீது நான் துயில...
பார்க்காத நேரங்கள் உன்
படத்தோடு காதல் பயில....
என்றாவது நீ வருவாயன
எதிர் நோக்கி நான் இருக்க...
கனவெல்லாம் நிஜமாகாது ...!
கானலெல்லாம் கடலாகாது....!
உரைக்காமல் உரைத்திட்டாய்..!
எனை உயிரோடு புதைத்திட்டாய்..!
உன்னக்காக உயிர் வளர்த்தேன் !
உயிர்க்காதலாய் தீ வளர்த்தேன் !
முடியாது என்று போக
உன் நினைவாலே தீக்குளித்தேன் .....!
இடி தின்ற மரம் போலே
இயலாமல் நான் விழுந்தேன்...!
நான் நினைவாலே உனைக் கொண்டேன்
நீ நிஜத்தாலே எனைக் கொன்றாய் ..!
கண்ணனுக்கான ராதையானேன் !
காட்டினில்விட்ட சீதையானேன்!
காலம் நம்மைச் சேர்க்காவிட்டால்
உடல் நீத்து உயிர் பிரிப்பேன்
காற்றோடு காதல் பேசி
உன் மூச்சோடு கலந்திடுவேன் ...!
உன் உயிரோடு உறைந்திடுவேன் ...!
நீ இருக்கும்வரை இருந்திடுவேன் ...
இறுதியில் உன்னோடு இறந்திடுவேன்...!!!!!!!
இப்படிக்கு
உன் ராதை.....