மதி மயங்கும் மதி முகம்

மதி மயங்கும் மதி முகம்
கண்ணாடி நீரோடையில் கண்டு
கலைத்து தழுவி
கொஞ்சி மிஞ்சி அஞ்சி
அலையோடு விளையாடும் காற்று
கன்னம் கடிக்கும் அன்னம்
சல்லாபித்து மகிழும் மீனினம்
வனத்தில் வட்டமிட்டு
பூவுடலை போர்த்தும் புறா
மிடுக்கோடு கூந்தல் ஏறி
எடுப்பான முகத்துக்கு மெருகேற்றும் அல்லி
கட்டித் தழுவி
ஒட்டி உறவாடும் நூலாடை
பிஞ்சுப் பாதங்களை
கொஞ்சித் தழுவும் காலணி
அகண்ட முகத்தில்
மலர்ந்து ஒழி வீசும் மூக்குத்தி
இதழ் தழுவி
தொண்டை நழுவும் நீர்
இவை யாவும் செய்த
தவம் தேடி அலைகிறேன்
அன்பே
என் மனம் நாண
உளமார
தினம்
உனை சேர

எழுதியவர் : Nanjappan (4-Jun-13, 3:02 pm)
பார்வை : 165

மேலே