ஜெயன் கவிதை...

போகிற வழியில்
கற்றாழையில்
எழுதிக் கண்டது
மறக்கவில்லை...

யாரும் சொல்லித் தரவில்லை
பச்சை மரத்தில்
தைத்தது தைத்ததுதான்...
இல்லா மரத்தில்,
செதுக்கிய இதயத்தை
தேடுகிறது இதயம்...

ஒற்றை பாதையாய் கிடந்தது
சாலையாய் பார்க்கையில்
கை பிடித்து
பின்னால் வந்தளை
நினைக்க தோன்றுகிறது...

ஒற்றை மைனா,
துக்கம்...
மற்றொன்று தேடி
பரிசு என்று
ஒன்று பெற்றது...

பெற்றதை கடித்து,

எச்சில் பரிமாற்றம்
பிணி பரப்பும் - இருந்தும்
நட்பு, காதால் என்றோ
பாசம், பரிவால் என்றோ
சொல்லிக் கொள்ளவில்லை...

கூட்டாஞ்ச்சோறு எனும்
மண் சோற்றை விட
ருசிப்பதில்லை,
தொலைக்காட்சியின் முன்
பருகும் பானம்...

சட்டம் பயிலாமல் வாதாடும்
நண்பன்...

வலிக்கும்...,
தெரிந்தே - என்
வலியை வாங்கிக் கொள்ளும்
வகுப்பறைக் காதலி...

அவள் தந்த
மயிலிறகுக்கு மட்டும்
உணவு வைக்க
மறப்பதில்லை நாளும்...

எல்லாம் இருக்கிறது
இன்னும்...
கணக்கு புத்தகத்தில்
நடுவே புரட்டியதில்
அழுக்குகளுடன் அழகாய்..

எழுதியவர் : ஜெயன் (4-Jun-13, 10:09 pm)
சேர்த்தது : JEYAN M R
பார்வை : 75

மேலே