மன்னிப்பாயா இறைவா?

அடிக்கடி முடி கோதும் அருக்காணியை
கடிகாரம் கட்டிக் கடுப்பேற்றும் கமலாவை
கை காட்டி பேருந்து நிறுத்தும் கனகாவை
கை கட்டிப் பேசும் காயத்ரியை
காலையில் தினம் கோலம் போடும் காவியாவை
வித விதமாய் தினம் சமைத்து அசத்தும் வித்யாவை
பாத்திரம் துலக்கி பளபளப்பாக்கும் பத்மாவை
ஆடை துவைத்து வெள்ளை அணியும் அலமுவை
கணவனின் சட்டையை தானே தைக்கும் சரசுவை
குழந்தையை நீராட்டி சோறுட்டி தலாட்டிதூங்க வைக்கும் குமுதாவை
பார்க்கும் போதெல்லாம்
என் கை பறித்த பாவி நீயென
தினம் திட்டிய பேதையெனை
மன்னிப்பாயா இறைவா?

கரமின்றி தினம் உழைத்து
கால் கஞ்சி அரைக் கஞ்சி
குடித்தாலும்
என் மகன் பிஞ்சுக் கரம்
நழுவி வாய் புகும்
துளி சோறும் அமிர்தம்

பச்சிளம் பாலகன்
இவன் பால் மனம் வீசும் கோமகன்
அன்னக்கை நீட்டும் சோறு
அதற்க்கு நிகராகாது ஐநூறு மேரு

எழுதியவர் : Nanjappan (4-Jun-13, 8:23 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
பார்வை : 135

மேலே