சுற்றுச்சூழல்

வாழும் இடம்
வாழும் இயற்கை
வாடிட கூடாதே
கூடி வாழும்
கூட்டுக்குடும்பம்
சிதறிப்போனால்
கேடு விளையுமே !

நிழல் தந்து
உரம் தந்து
ஊண் தந்து
மழை தந்து
மரம் தந்து
உறை எழுப்ப
ஊர்த் தந்த
காடுகள் கலைய
நாடு சுடுகாடாகிடுமே

புவி வெப்பமேறி
அவி நிலையாய்
மக்கள் வாழும்
அவலநிலை உருவாகிடுமே
ஆக்கம் கொண்ட அறிவியில
நோக்கம் சரியாய் இருந்தால்
ஆபத்து பூமிக்கில்லையே

சூழ்நிலை தன்னில்
சூழ்ந்து வாழும்
உயிர்கள் யாவுக்கும்
உரியவை இயற்கையே
மானுடம தவிர்த்த
மற்ற யாவைக்கும்
கேடு விளைவிக்கும்
கெட்ட குணமில்லையே

ஆறறிவு கொண்ட
அறிவிலி மானுடன்
ஆசைக் கொள்ளவே
அரளி நஞ்சாய்
அழிக்கிறான் இயற்கையையே

சூழ்ந்த நிலையாவும்
சுழல்கிறது நஞ்சாக
சுவாசித்திடும் காற்றிலும்
கரும்புகைகள் கலந்திருக்கு நஞ்சாக

கட்டுடல் மேனிக்கொண்ட
கலையரசி போல் இருந்தவள்
கற்ப்பிழந்த மலராய்
காலம் முடிந்த பூவாய்
கழிவுகள் சேருமிடமாக
கண் கலங்கி நிற்கின்றாள்
கடலன்னையே

இத்துடன் நிறுத்துங்கள்
இயற்கை நீர்ப்பதை
மானுடத்தின் நேசிப்பிலே
மற்ற உயிர்களும்
மகிழ்வுடன் வாழ்ந்திடுமே

எழுதியவர் : தமிழ்முகிலன் (5-Jun-13, 11:34 am)
பார்வை : 4067

மேலே