இதயம் - சி.எம் .ஜேசு

ஒரு துளி இரத்தத்தில் உதயமாகி
இதயமாகி துடிக்க ஆரம்பித்தாய் - உன்
துடிப்பை வைத்துதான் - என்
வளர்வை பார்த்தனர்

நீ துடித்து எனை வரைந்து
முழு உருவாய் மாற்றினாய்
எனை ஈன்ற அன்னைக்கு
அவள் நிழலைக் காட்டினாய்

வெளி வந்து உடன் வளர்ந்து
உன்னறிவைக் காட்டினாய்
அறிவுகள் அனுபவங்களைக் கொண்டு
உன் வாழ்வை மாற்றினாய்

உன் துடிப்பு நின்று விட்டால்
என் உடல் உலகில் மண்ணாகும்
உன் துடிப்பு வளர்ந்து விட்டால்
என் உடல் விண் உலகிற்கும் போகும்

எழுதியவர் : சி.எம். ஜேசு (5-Jun-13, 11:33 am)
பார்வை : 106

மேலே