ஏற்றுக்கொள்ள முடியாத சமாதானம்

பெருகிவரும் மக்களினம்
சுருகிவரும் இயற்கைவளம்
மரபுகள் மாறும் கலியுகம்
மறந்துபோன மனிதன் ..........

நீர்நிரைத்த பூவுலகில்
நான்கில் ஒன்று நிலப்பகுதி
நிலப்பகுதி முழுவதிற்கும்
மனித இனம்தான் ஆட்சிசெய்யுமோ ............

அடர்ந்திருந்த காடுகள்
அடையாளம் தெரியாமல் அழிந்திட
ஆக்கிரமிப்பு செய்துவிட்டான்
மனிதன் அட்டகாசம் செய்கிறான் ...............

உயர்ந்திருந்த மலைகள் எல்லாம்
வெடிவைத்து சிதைத்திட
உருக்குலைந்து போய்விட்டன
மலைகள் உருவம் தெரியாமல் போய்விட்டன .....

விரிந்து ஓடிய ஆறுகள்
தொடர்ந்து வரும் ஆக்கிரமிப்புகள்
சுரண்டி அல்லும் மணல்திட்டுகள்
நீரோடு சேர்ந்து மணல்கூட வற்றிவிட்டது ஆற்றில்..

பேராசை கொண்ட மனிதனின் ஆசையால்
விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும்
உயிர்வாழ இடம்இல்லாமல் போய்விட்டது ............

சுவாசிக்கும் காற்றிலிருந்து
குடிக்கும் நீர்
வாழும் பூமிவரை
மனிதனே அசுத்தபடுத்திக்கொன்றுக்கிறான் .......

இயற்கைவழி உணவை மறுத்தவன்
மருந்தால் விளைந்ததை உண்டு
மருந்துண்டு காலம்கழிக்கிறான்
மருத்துவமனையிலே வாழ்வை கழிக்கிறான் .....

இந்தநிலை தொடர்ந்துவந்தால்
பூவுலக பூமி இது
பாழுலகம் ஆகிவிடும்
மனித இனமும் அழிந்துபோகும் .............

தினம் தினம் தொடரும்
மனிதனின் பொறுப்பாற்ற செயலால்
வாழும் உயிர்களில் அழிந்துபோகும்
ஓர்நாள் மனித இனமும் மடிந்துபோகும் ..............

நீர் வற்றி
நிலம் வெடித்து
வெப்பாம் தாங்காமல்
பூமிகூட ஓர்நாள் வெடித்து சிதறும் ..............

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Jun-13, 10:58 am)
பார்வை : 95

மேலே