ஓடி விளையாடு பாப்பா - கிரிக்கெட்டு டுபாக்கூர்
அடிச்சான் மட்டையை தரையிலே - அவன்
எடுத்தான் துட்டையே மடியிலே
கைகொட்டி மனுசனும் சிரிக்கிறான் - அவன்
காசு கருப்பா மாறுவது புரியலே....!
சூதாட்டம் சூதாட்டம்
கிரிக்கெட்டு சூதாட்டம்
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓராயிரம் கோடி ஊழல் பண்ணனும் பாப்பா....
வளரும்போதே பள்ளியில் நீ
வாங்கும் லஞ்சத்தை பாரு பாப்பா.....
வளர்ந்த பின்னே மனிதநேயம் பற்றி
வாய் திறந்தால் யாரேனும் - அவரை
வாட்டி வதக்கி நீ புரட்டி எடுத்து
வதம் செய்த பின்னே நீ மிருகமாகு பாப்பா....!