ஓசை

மனம் நிம்மதி வேண்டி
மனமுருகி மனமுருகி

கடவுளிடம் குறை சொல்லி
அப்படியே பக்தியில் மூழ்கி

அர்ச்சகர்களின் மந்திர ஓசை
நாதஸ்வரத்தின் இனிய ஓசை
மேளத்தின் தாள ஓசை
கோவிலின் மணி ஓசை
பக்தர்களின் பரவச ஓசை

என அனைத்தையும் ரசித்து
வீட்டிற்கு திரும்பி வருகையில்

வீடு வரையில் மனதில்
கேலியாய் சிரிக்கிறது

பிச்சைகாரர்களின்
பசி ஓசை

ஆலைய வாசலில்
காலம் காலமாய்
காலம் தள்ளும்
எங்களுக்கே படியலக்காத
கடவுள்
உங்களுக்கு மட்டும்
வாரி வழங்கவா போவுது
என்று ஏளனமாய்
பேசியபடி

எழுதியவர் : எழுத்தாளன் சஷி (5-Jun-13, 8:36 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : oosai
பார்வை : 62

மேலே